சொகுசு கார் விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வள்ளியூரை சேர்ந்த டாக்டர் தம்பதி ரவீந்திரன் ரமணி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.
நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு இலந்தைகுளம் பகுதியில் சிவகாசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வள்ளியூரை சேர்ந்த டாக்டர் ரவீந்திரன் (50) அவரது மனைவி டாக்டர் ரமணி (45) ரவீந்திரன் தாயார் சேர்மத்தாய் (70) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரில் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து தொடர்பாக கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :