அஜித்குமாரை அடித்தே கொன்ற காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சிவகங்கை திருப்புவனம் அருகே காவலாளி அஜித்குமாரை காவலர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கைது செய்யப்பட்ட காவலர்களின் காவல் நீட்டிப்பு மனு குறித்தான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, காவலர்களுக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags :