நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் மீது நவ-15ஆம் தேதிவரை புகார் அளிக்கலாம்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டார்களின் பணத்தை மோசடி செய்தததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் இயக்குநர்கள் கைதாகி ஜாமினில் உள்ளனர்
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவிப்பு
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது பெயர் ,முகவரி செல்போன் எண், ஆதார் எண், பாண்டுகளின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை , முதலீடு செய்த வங்கி கணக்கு ஏஜென்ட்களின் விவரம் உள்ளிட்டவைகளை அடங்கிய விவரங்களுடன் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவிப்பு
மதுரை மாநகர் தபால்தந்திநகர் பார்க்டவுண், சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவம்பர் -15ஆம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம் - என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்.
Tags : நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் மீது நவ-15ஆம் தேதிவரை புகார் அளிக்கலாம்.