மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.

by Editor / 28-07-2024 10:14:44pm
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வினாடிக்கு 1.51 லட்சம் கன அடியில் இருந்து 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.‌ தொடர் நீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 110.76 அடியில் இருந்து 112.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 81.67 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Share via