மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

by Staff / 06-08-2023 03:06:57pm
மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

நாளை (ஆக.07) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்குகிறது. இதனையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் நாளை காலை தங்களின் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories