ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்.

தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா கலந்து கொண்டு ரயில்வே துறை வருவாயை பெருக்க ஒப்பந்ததாரர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் ஜவுளிக்கடைகள், மதுரை, விருதுநகர், ராமநாதபுரத்தில் தோல் பைகள் விற்பனை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலியில் வாசனை திரவிய கடைகள், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, பழனி, காரைக்குடி, ராமநாதபுரத்தில் தானியங்கி நாப்கின் விற்பனை, ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி தங்கும் அறைகள், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பழனி, காரைக்குடியில் மொபைல் போன் கருவிகள் விற்பனை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனியில் எழுது பொருள், பூங்கொத்து, பொம்மை விற்பனை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கொட்டாரகராவில் அழகு சாதன பொருட்கள் விற்பனை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரத்தில் கண் கண்ணாடி மற்றும் கைக்கடிகாரம் விற்பனை, கூடல் நகர், திண்டுக்கல், கங்கைகொண்டான், மீளவிட்டானில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது போன்ற 70 சேவைகள் மூலம் ரயில்வே வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் ஏழு கோடி வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய மேலும் விவரங்கள் https://www.ireps.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ், கோட்ட வர்த்தக மேலாளர் டி. மோகனப்பிரியா உட்பட 20க்கு மேற்பட்ட விளம்பர பிரிவு ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
Tags : ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்.