மருத்துவ சிகிச்சையில் இருந்த தாயாரிடம் ஆசி பெற்ற முதல்வர்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.20) தனது 50வது திருமண நாளையொட்டி தனது மனைவியுடன் சென்று தாயார் தயாளுவை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது எடுத்த புகைப்படத்தை முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முதல்வரின் தாயார் மருத்துவ சிகிச்சையில் இருப்பது தெரிகிறது. இதனால் அவருக்கு என்ன பிரச்னை என திமுகவினர் கவலையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் வயது மூப்பினால் உடல்நல பிரச்னை காரணமாக முதல்வரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : மருத்துவ சிகிச்சையில் இருந்த தாயாரிடம் ஆசி பெற்ற முதல்வர்.