சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது வீரவணக்கம் நினைவு நாள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது வீரவணக்கம் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்விற்கு
வந்த தமிழக வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் கமல்கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்அமைச்சர் பேசுகையில், கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள நமது முதலமைச்சராக இருந்தாலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய முதலமைச்சராக விளங்கி வருவதாகவும் அவரின் மேலான உத்தரவுகிணங்க இன்று சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகவும் அவர் பேசினார்.
Tags : சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது வீரவணக்கம் நினைவு நாள்.



















