அஜித் குமார் கொலை வழக்கு – இறுதிக்கட்ட  விசாரணை மேற்கொண்ட சிபிஐ.

by Staff / 20-08-2025 09:44:24pm
 அஜித் குமார் கொலை வழக்கு – இறுதிக்கட்ட  விசாரணை மேற்கொண்ட சிபிஐ.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்த நிலையில் நாளை சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இன்று  இறுதிக்கட்டமாக 35வது நாள்  திருப்புவனம் காவல் நிலையத்தில்  சிபிஐ  குழுவினர் 15 நிமிடத்திற்கு மேலாக  விசாரணை மேற்கொண்டனர்.அதனை முடித்துவிட்டு  27ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சார்பு ஆய்வாளரிடம் விசாரணை முடித்துவிட்டு கையொப்பம் பெற்று சென்றனர்.

 

Tags :  அஜித் குமார் கொலை வழக்கு – இறுதிக்கட்ட  விசாரணை மேற்கொண்ட சிபிஐ.

Share via