கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்களை ஏற்றி வந்த வேன் மீது மோதி விபத்து 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்களை ஏற்றி வந்த வேன் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற டிப்பர் லாரி இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து மாற்று சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மற்றும் வேன் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :