டிடிவி தினகரனின் விலகல் முடிவை வரவேற்கிறேன்-பெங்களூரு புகழேந்தி.

தமிழக அரசியல் களம் நாளுக்குநாள் மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது.முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ,டி.டி.வி.தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.இந்தநிலையில் ,அண்ணாமலை பாஜகவை விட்டு விரைவில் வெளியே வருவார் என அதிமுகவின் முன்னாள் கர்நாடக மாநில நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “அண்ணாமலை பாஜகவில் தொடர மாட்டார். செங்கோட்டையன், டிடிவி.தினகரன், அண்ணாமலை ஆகிய மூவரும் பேசி வைத்துத்தான் இப்படி செய்கின்றனகர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால், செங்கோட்டையன் அண்ணனுக்கு டெபாசிட் போய்விடும். டிடிவி தினகரனின் விலகல் முடிவை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags : டிடிவி தினகரனின் விலகல் முடிவை வரவேற்கிறேன்-பெங்களூரு புகழேந்தி.