இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் எம்.எல்.ஏ ஐயப்பன்

விரைவில் தேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உசிலம்பட்டியில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்திய பின்பு பேட்டிய அளித்த அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும் என அவர் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை உயர்நீதிமன்றத்தில் உள்ள பிரதான சிவில் வழக்குகள்தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags :