பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு- அமைச்சர்

by Editor / 23-01-2023 04:32:50pm
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு- அமைச்சர்

இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி. அவர் கூறுகையில், இந்தியாவில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்தன. ஆனால் தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories