நியூசிலாந்தில் நிலநடுக்கம்
நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிகிறது. இதனிடையே, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் இந்தியாவில் அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Tags :