ராஜஸ்தான் ராயல்அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வியாழன் இரவு ஏழு முப்பது மணி அளவில் நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட வந்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது .13.1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்னை எடுத்து கொல்கத்தா அணியை தன் சொந்த மைதானத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது.

Tags :