வேலூர் அரசு மருத்துவமனையில்குழந்தை கடத்தல்- பெண் கைது.குழந்தை மீட்பு.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்கள் ஆன ஆண் குழந்தையை நேற்று பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார் இது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இடையஞ்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்ற பெண் குழந்தை கடத்திச் சென்றது தெரிய வந்தது போலீசார் வைஜெயந்திமாலாவை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை கடத்திச் சென்று பெங்களூர் சேர்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளார் இது குறித்து விசாரணை செய்த போலீசார் பெங்களூர் சென்று கடத்திச் செல்லப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு வேலூருக்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரை கைது செய்து கிருஷ்ணகிரியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : வேலூர் அரசு மருத்துவமனையில்குழந்தை கடத்தல்- பெண் கைது.குழந்தை மீட்பு.