மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.கழக வேட்பாளராக எம்.எம். அப்துல்லா

by Editor / 22-08-2021 05:18:27pm
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.கழக வேட்பாளராக எம்.எம். அப்துல்லா

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல்செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக (DMK) வேட்பாளரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் (M.K.Stalin) அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், '2021 செப்டம்பர் 13 அன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார் 

 

Tags :

Share via