அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு

by Editor / 22-08-2021 05:20:26pm
அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதநிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் பற்றிய தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டு உள்ளது .

அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள் . அதில் , 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 பேர் ஆண்கள் , 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பேர் பெண்கள் , 257 பேர் மூன்றாம் பாலினத்தவர் . காத்திருப்போரில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர் .

24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 ஆயிரத்து 948 பேர் , 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 77 ஆயிரத்து 839 பேர் , 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 213 பேர் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 77 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது .

 

Tags :

Share via