காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு உரிமை உள்ளது தமிழிசை சவுந்தர்ராஜன்

by Staff / 27-09-2022 03:59:35pm
காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு உரிமை உள்ளது தமிழிசை சவுந்தர்ராஜன்

காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு உரிமை உள்ளது" - தமிழிசை சவுந்தர்ராஜன்
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூறியதாவது, "எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறக் கூடாது. இது பொது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும். ஆர்எஸ்எஸ் பேரணியை ஏன் தடை செய்ய வேண்டும்.ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி ஊர்வலமாகவே இருந்தது. தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்திநஅன்று பேரணி செய்வதில் என்ன தவறு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo