முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசி தரூர்
கேரளாவில் முதல்வராக அரியணை ஏற ஆசைப்படுவதாக, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசியிருப்பதால், மாநில காங்கிரஸில் கலக்கம் வலுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்ற நிலையில், அவரது கவனம் கேரளாவின் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய அரசியலை விட்டு, மாநில அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக வெளியான செய்தி, மாநிலத்தில் ஏற்கனவே பதவிக்காக காத்திருக்கும் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















