வெளிநாட்டு தடுப்பூசி

by Editor / 13-04-2021 05:27:15pm
வெளிநாட்டு  தடுப்பூசி

வெளிநாடுகளில், அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை, இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள ‍கோவிஷீல்டு தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்‌டை போக்கும் வ‌கையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை, இந்தியாவில் அவசரத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில், அவசரகால பயன்பாட்டுக்கென்று பட்டியலிடப்பட்டுள்ள, வெளிநாடுகளின் கொரோனா தடுப்பூசிகளை, இந்தியாவில் அவசரத் தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via