இலங்கை பந்துவீச்சில் 156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு சுருண்டது. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக பெங்களூருவில் இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் 43, பேர்ஸ்டோவ் 30, மாலன் 28 ரன்களைத் தவிர வேறு யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இலங்கை பந்துவீச்சாளர்களில் லஹிரு குமார் 3, ராஜித 2, ஏஞ்சலோ மேத்யூஸ் 2, தீக்ஷனா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Tags :