தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்: 5 லட்சம் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் 5 லட்சம் லாரிகள் இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கனரக வாகனங்களுக்கான வரி, கட்டண உயர்வுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் தெரிவித்தார். தமிழக அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களை புதிதாக பதிவு செய்வதற்கான கட்டணம், பர்மிட் பெறுவதற்கான கட்டணம், ஆயுட்கால வரி, லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உள்ளிட்ட அனைத்து வரி, கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தின. இந்நிலையில், காலாண்டு வரிமற்றும் கட்டண உயர்வைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம்முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்என்று நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடந்த மாதம் அறிவித்தது.
Tags :