ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

by Admin / 06-07-2022 12:52:29am
 ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) க்கான  தேர்வு  தேதியை அரசு  தேர்வு  வாரியம்   அறிவித்துள்ளது . 1 முதல்  8 ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை அரசு தேர்வாணையம் நடத்துகிறது  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் I தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது .தாள் II க்கான  தேர்வு  தேதிகள்   ஆகஸ்ட்     இரண்டாவது   வாரத்தில்  அறிவிக்கப்படும் TET   தேர்வை கணினி வழி   தேர்வாக நடத்த  ஆசிரியர்   தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது.  தேர்வர்   அதிக எண்ணிக்கை யிலிருப்பதால்  இரண்டு  கட்டங்களாக  தேர்வு  நடத்தவுள்ளது.  அரசுப்  பள்ளிகளில் காலியாக உள்ள 9,000க்கும் மேற்பட்ட  பணியிடங்களை அரசு  இந்த ஆண்டு இறுதிக்குள்  நிரப்ப திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo