தமிழகத்தில்10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-அரசு தேர்வுகள் இயக்ககம்.

தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறுவாய்ப்பு உடனடியாக வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு இன்று மே 22ஆம் தேதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Tags : தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.