தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சங்க பணியாளர்கள் அவற்றின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கணினி பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆகியோர் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்களுக்கு புளுடூத் முறை உள்ளது போல் ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்களுக்கும் புளுடூத்தில் இணைக்கப்படும் என்று பதிவாளர் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடிசென்று பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் நடைமுறை செலவுகள் கண்டறியப்பட்ட வேண்டும். உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.மேலும் இந்த சங்கத்தை சேர்ந்த ரேசன் கடை ஊழியர்கள் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர்.தற்போது இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயத்துக்கு தேவையான பயிர் கடன் நகை கடன் வழங்குவது, உரம் தட்டுப்பாடு ஏற்கனவே நிலவிவரும் நிலையில் தனியாரில் கூடுதல் விலைக்கு கிடைப்பதால் அதிகளவு விவசாயிகள் இந்த வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.
தற்போது இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் விவசாயிகள் நெற்பயர்களுக்கு அடி உரம் தெளித்தே ஆக வேண்டும் என கட்டாயத்தில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு