தேர்தல் ஆதாயத்திற்காக ஜிஎஸ்டிவரியை குறைத்த மத்திய அரசு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி

திருவண்ணாமலை மாநகராட்சி திருவள்ளுவர் சிலை அருகே திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜி. குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் வெற்றிச்செல்வன், காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கையெழுத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்ளை சந்தித்த கே.எஸ். அழகிரி
மோடியின் அரசாங்கம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை புகுத்த நினைக்கின்றனர், எல்லாரும் அவரவர் கருத்துக்களை சொல்லலாம் என்ற சூழலை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
அதனால்தான் இன்றைக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது எனவும்,
இந்த நிலையை மாற்றுவதற்கு RSSம் மோடியும் முயற்சி செய்கிறார்கள். அதற்கு தேர்தல் ஆணையத்தை பகடக்காயாய் பயன்படுத்துகின்றனர் என்றார்.
பீகாரில் 55 லட்சம் மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது, இதற்கான காரணத்தைக் கேட்டால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை எனவும், அதன் பிறகு ராகுல் காந்தி பீகாருக்கு சென்று நடை பயணம் மேற்கொண்டார், இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை வந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் காங்கிரஸ் கட்சி மற்றும் அதனுடைய தோளுமைக் கட்சிகளும் வாக்குத்திருட்டுக்கு எதிராக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகின்றோம்.
இந்த விஷயம் பீகார் சம்பந்தப்பட்டது என்று பார்க்காமல் இந்தியாவினுடைய ஜனநாயகத்தை சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்க வேண்டும், எல்லோருக்கும் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினால் அவர் இந்தியாவினுடைய நலனுக்கு எதிராக பேசுகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையில் இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் மோடியும் நிதி மந்திரியும் ஜிஎஸ்டி வரியை குறைத்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர், ஜி. எஸ். டி முதன் முதலில் கொண்டு வந்தது மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி, அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் தான் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தினார்.
அதில் இந்தியா முழுவதும் ஒரே வரி சீரான வரி குறைந்த வரி அதற்குப் பெயர் தான் ஜிஎஸ்டி என்று அவர் கூறினார். அப்போது பாஜகவினர் ஜி எஸ் டி க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த சட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டியை கொண்டு வந்தார்கள் அதனை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது, ஜிஎஸ்டியை திருத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் சொன்ன போதும் திருத்தாமல் தேர்தல் வரும் சமயத்தில் ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டுவதற்கான நோக்கம் என்ன. இது நேர்மையான அரசியல் அல்ல.
மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக அதிக தொகுதியில் போட்டியிட கேட்போம், அதிகாரத்தில் பங்கு கேட்போம். இந்த நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு. தொலைக்காட்சியில் நமக்கு எதிரான கருத்து நாம் விரும்பாத கருத்து வரும் பொழுது அந்த நிறுவனத்தை தடை செய்திருந்தால் தவறு,அதனை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை .
இது முதல் அமைச்சரின் கவனத்திற்கு சென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார், கரூர் சம்பவத்தில் நான்கு பக்கமும் குற்றம் உள்ளது, அதனால் யார் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம். வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்கள் தலைவரும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த பாலியல் சம்பவத்தில் காவல்துறையை இரண்டு தனி நபர்களின் தவறுக்கு காவல்துறையை குற்றம் சொல்ல முடியாது, காவல்துறை அவர்களை காப்பாற்றினால் அப்பொழுது குற்றம் சொல்லலாம் எனவும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் குரல் சட்டமன்றத்தில் கண்டிப்பாக கேட்கும் என தெரிவித்தார்.
Tags : தேர்தல் ஆதாயத்திற்காக ஜிஎஸ்டிவரியை குறைத்த மத்திய அரசு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி