கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.150 ஒதுக்கீடு -1 லட்சம் பேர் பயன்  பெறுவார்கள்.

by Editor / 16-12-2021 12:21:43am
கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.150 ஒதுக்கீடு -1 லட்சம் பேர் பயன்  பெறுவார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர்  முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட அந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.அந்த அறிவிப்பை மெய்பிக்கும் வண்ணம் 
கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள். சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்  பெறுவார்கள்.

 

Tags :

Share via