பிரிட்டன் பிரதமர் தேர்தல் – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முதலிடம்

by Editor / 19-07-2022 09:22:54am
பிரிட்டன் பிரதமர் தேர்தல் – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முதலிடம்

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான அடுத்த கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 4ஆக குறைந்துள்ளது.
 
பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து கட்சியின் புதிய தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 6 ஆக குறைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3வது சுற்று வாக்கெடுப்பிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தார்.

357 எம்பிக்கள் வாக்களித்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். வர்த்தக் செயலர் பென்னி மோர்டான்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தையும் பிடித்தனர். மற்றொரு போட்டியாளரான கெமி படேனோச் 58 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.

இந்த நால்வரும் 4ஆவது சுற்று வாக்குப் பதிவில் பங்கேற்பார்கள். இன்று 4வது சுற்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நாளை கடைசி மற்றும் 5வது சுற்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடைசி வாக்கெடுப்பில் 2 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.
 

 

Tags : British Prime Minister Election – Rishi Sunak tops in 3rd round

Share via