இளைஞர் கொலை வழக்கில் மூன்று சிறார்கள் உட்பட 8 பேர் கைது.

by Editor / 03-02-2025 08:51:16am
இளைஞர் கொலை வழக்கில் மூன்று சிறார்கள் உட்பட 8 பேர் கைது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் நகரை சேர்ந்த சண்முகநாதன் என்பவரை கடந்த 31 ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது இது குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர் இந்நிலையில் சண்முகநாதன் கொலை தொடர்பாக திருப்பத்தூர் சீதளிவடகரையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற பூமிநாதன், காந்திநகர் சேர்ந்த பத்ம சீனிவாசன்,
 பிரபாகர் காலனியை சேர்ந்த சீனிவாசன், ஜே ஜே நகர் சேர்ந்த கார்த்திகேயன்,மதுரை ரோட்டச் சேர்ந்த வசந்த், ஆகியவர்களையும் 17 வயது சிறார் ஒருவனையும் 18 வயது சிறார் இருவரையும் என மொத்தம்  8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

 

Tags : இளைஞர் கொலை வழக்கில் மூன்று சிறார்கள் உட்பட 8 பேர் கைது.

Share via