திருச்செந்தூர்கோவில் முன் உள்ள கடல் சுமார் 50 அடி நீளத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் வருகை பல மடங்காக அதிகரித்து அதிகளவில் இருக்கும். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும்.
இந்த நிலையில் தைப்பூசம் நெருங்கிவருவதால் விரதமிருந்துவரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகாரித்துவரவுகிறது.இந்தநிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 50 நீளத்திற்கு அடி உள்வாங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக வெண்பாறையில் திட்டு வெளியே தென்படுகிறது. கடல் உள்வாங்கிய பகுதிகளில் குளிக்கும் பொது மக்களிடம் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags : திருச்செந்தூர்கோவில் முன் உள்ள கடல் சுமார் 50 அடி நீளத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு.