இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில், பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
பொறுப்புடன் வீசிய அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
Tags :