வெளுத்து வாங்கிய கனமழை.. 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரத்தில் நேற்று (ஆக.10) இரவு கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், அப்போது ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தன. குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. முக்கியமாக அறுவடைக்கு தயாராக 100 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மழை நீர் வெளியேற வாய்க்கால் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :



















