அதிகாலையில் கண்டெய்னர் லாரியில் புகையிலைப்பொருட்கள் கடத்தல்.

by Editor / 25-12-2024 11:05:43am
அதிகாலையில் கண்டெய்னர் லாரியில் புகையிலைப்பொருட்கள் கடத்தல்.

மதுரை மாநகர  புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போலீசார் அதிகாலை வாகன தணிக்கைமேற்கொண்டனர்.அப்போது  கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கோழி தீவனம் கால்நடை மருந்துகள் பேபி கிட் கொண்டு வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அந்தலாரியில் மறைமுகமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப் கணேஷ் போன்ற புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதனைத்தொடர்ந்து அதனை  கடத்தி வந்த  4 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து சுமார் 1400 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல்செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

 

Tags : அதிகாலையில் கண்டெய்னர் லாரியில் புகையிலைப்பொருட்கள் கடத்தல் 

Share via