ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்
பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைவாங்க உள்ளதாகஅறிவித்ததிலிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்தார்.அதன் தொடர்ச்சியாக,ட்விட்டரில் இருக்கும்போலி கணக்குகளை நீக்க வலியுறுத்தினார்.இதனால்,அவருக்கும் ட்விட்டருக்கும் மோதல் உருவானது.இந்நிலையில்,எலன் மாஸ்க் ட்விட்டரை தற்பொழுது வாங்கப்போவதில்லை என்று கூறினார்.இதனால் அதிர்ச்சியடைந்த ட்விட்டர் நிறுவனம் வழக்குத்தொடுக்கும்நிலைக்குச்சென்றது.இதற்கிடையே ,தற்பொழுது எலன் ட்விட்டரை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.சி.இ.ஒ.அகர்வாலை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.இந்நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்" என்று மஸ்க் கூறியுள்ளார்.
Tags :