மீன்பிடிப்பதில் விரோதம் கணவன் மனைவி வெட்டி கொலை.

by Editor / 28-10-2022 08:26:27am
மீன்பிடிப்பதில் விரோதம் கணவன் மனைவி வெட்டி கொலை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி செல்வி. இத்தம்பதிக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். கணவனும் மனைவியும் அருகில் உள்ள கண்ணாயில் நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மழுவேந்தி, ராஜதுரை ஆகிய வாலிபர்கள் மீன் பிடித்தனர்.

மீன்பிடிப்பதில் திடீரென்று இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதன் பின்பு வீட்டிற்குச் சென்ற கருப்பசாமியும் அவரது மனைவி செல்வியும் வழக்கம் போல் வீட்டு வாசலில் படுத்து தூங்கி இருக்கிறார்கள். அவர்களது மகன் வீட்டுக்குள் படுத்து தூங்கி இருக்கிறார். நள்ளிரவில் கருப்பசாமியும் அவரது மனைவியும் அலறும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் ஓடி வந்து பார்த்திருக்கிறார். அப்போது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்து இருக்கிறார்கள். அஜித்குமாரை பார்த்ததும், அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ராஜதுரையும், மழுவேந்தியும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories