தருமபுரம் ஆதீனம் விவகாரம்- பாஜக நிர்வாகி பதவி பறிப்பு

by Staff / 23-06-2024 12:58:30pm
தருமபுரம் ஆதீனம் விவகாரம்- பாஜக நிர்வாகி பதவி பறிப்பு

ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.அகோரம், மாவட்டத் தலைவர், எஸ்.பாஸ்கர், மாவட்டத் தலைவர் மற்றும் சி.எழிலரசன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆகியோர் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories