உலகக் கோப்பைக்கு புது சிக்கல்

by Staff / 20-08-2023 12:35:04pm
உலகக் கோப்பைக்கு புது சிக்கல்

இந்தியாவில் 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ஐதராபாத்தில் அக்டோபர் 9 (நியூசிலாந்து-நெதர்லாது), மற்றும் 10ல் (பாகிஸ்தான்-இலங்கை) நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை மாற்றும்படி பிசிசிஐக்கு, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால், புதிய அட்டவணை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via