தீப்பிடித்து எரிந்த பஸ்... 16 பேர் பலி

by Staff / 20-08-2023 12:28:27pm
தீப்பிடித்து எரிந்த பஸ்... 16 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று காலை வேன் மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. பேருந்து கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories