பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்  ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்திலிருந்து புறப்பாடு

by Editor / 28-06-2021 04:38:07pm
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்  ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்திலிருந்து புறப்பாடு

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வண்டி எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இன்று (28.6.2021) ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.40 மணிக்கு புறப்படும். மேலும் வண்டி எண் 02206 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலும் இன்று (28.6.2021) ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மண்டபம் ரயில்  நிலையத்திலிருந்து இரவு 08.52 மணிக்கு புறப்படும். 
இந்த இரு ரயில்களுக்கும் ராமேஸ்வரத்திலிருந்து பயணச்சீட்டு பதிவு செய்த பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் மண்டபம் ரயில் நிலையத்திற்க்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories