பாஜகவினரை விமர்சித்த செல்வப்பெருந்தகை

by Staff / 20-03-2024 02:03:35pm
 பாஜகவினரை  விமர்சித்த  செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என்றார். மேலும் பாஜக குறித்து விமர்சித்த அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories