சொகுசுவாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதலனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த கொன்ற காதலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமவர்மச்சிறையில் வசித்த இளம் பெண் கிரீஷ்மா, வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், கேரளாவின் பாறசாலா பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவரை காதலித்துவந்தநிலையில் அவருடனான உடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பினார், ஆனால் ஷரோன் பிரிந்து செல்ல தயாராக இல்லை.ஷாரோன் ராஜ் (25) என்பவரும், கிரீஷ்மா (22) என்ற இளம்பெண் காதலித்த நிலையில் கடந்த 2022-ல் கிரீஷ்மா, ஷரோன்ராஜுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்றார். இதற்கு அவரின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் உடந்தையாக இருந்த நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கிரீஷ்மா, நிர்மல் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று (ஜன. 17) நீதிமன்றம் அறிவித்த நிலையில் இக்குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவரது தாயாரை விடுவித்தது.கிரீஷ்மா, நிர்மல் ஆகியோருக்கு தண்டனை விவரங்கள் இன்று (ஜன. 18) வெளியாகிறது.
Tags : சொகுசுவாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதலனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த கொன்ற காதலி