பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்:போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் விஜய்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில் அவர் பரந்தூர் செல்வதற்கு காவல்துறை சார்பில் ஜன. 20-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட களத்திற்கு செல்கிறார். மக்களை விஜய் சந்திக்க ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஏகனாபுரம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டார்.
Tags : பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்:போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் விஜய்.