4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

by Editor / 30-11-2024 08:40:15am
 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

சென்னைக்கு வந்த 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. புனே, குவைத், மஸ்கட் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளன. சென்னையில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் பயங்கர காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விமானங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

Tags : 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

Share via