காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

by Editor / 19-04-2021 08:54:20am
காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

கேரளாவில், காலணியை கடித்ததற்காக நாயை 'பைக்'கில் கட்டிவைத்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியில், கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவரது காலணியை, நேற்று முன்தினம், ஒரு நாய் கடித்து விட்டது.இதனால் ஆத்திரம்அடைந்த சேவியர், அந்த நாயை, தன் பைக்கில் கட்டிவைத்து, பைக்கை வேகமாக இயக்கிச் சென்றார். இதில், அந்த நாய் தரதரவென சாலையில் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒருவர், அதை, 'வீடியோ'வாக எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவு செய்தார்.இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ், சேவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில், சேவியரை, போலீசார் நேற்று கைது செய்தனர். எனினும், பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே, படுகாயம் அடைந்த நாய்க்கு, கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :

Share via