குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஐந்தாவது நாளாக தொடரும் தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

by Admin / 29-05-2025 10:48:08am
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஐந்தாவது நாளாக தொடரும் தடை  சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

ஐந்தாவது நாளாக தொடரும் தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 24 ஆம் தேதி கனமழை பெய்ய தொடங்கியது இந்த நிலையில் அன்றைய தினம் மஞ்சள் எச்சரிக்கையும் 25 26 ஆகிய இரண்டு தினங்கள் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை தொடர்ந்து நீடித்தது.

இந்த நிலையில் 29ஆம் தேதி இன்று அதிகாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐந்தாவது நாளாக இன்றும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்கிறது.

 இதன் காரணமாக கோடை விடுமுறை முடிந்து குற்றால அருவிகளில் நீராடலாம் என வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் கோடை விடுமுறை முடிவதால் குழந்தைகளோடு குளிக்க வந்தவர்கள் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பிற நீர் நிலைகளின் திரண்டு சென்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.

 இந்த நிலையில் இன்றும் நாளையும் தென்காசி மாவட்டத்திற்கு மிக அதிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

 

Tags :

Share via