பெரியகுளம் செங்கல் சூலைக்கு உரிய ஆவணங்கள் இன்றி மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கைலாசபட்டி சரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூலைகள் இயங்கி வருகிறது.செங்கல் தயாரிப்பதற்காக அரசு அனுமதி பெற்று மண் வெட்டி எடுக்கப்படுகிறது.இந்த நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி செங்கல் சூலைகளுக்கு மண்வெட்டி எடுத்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஜத்பீடன் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்பொழுது போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து மண்வெட்டி எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகளில் ஏற்றி வருவதை கண்ட சார் ஆட்சியர் ரிஜத்பீடன் மண்வெட்டி எடுத்து வருவதற்கான ஆவணங்களை பரிசோதனை செய்தார்.அப்பொழுது மண் வெட்டி எடுத்த இடம், எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் நான்கு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த சார் ஆட்சியர்.பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.இதன் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : பெரியகுளம் செங்கல் சூலைக்கு உரிய ஆவணங்கள் இன்றி மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்.