முதல்வர் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இம்மாதம் 2 அல்லது 3ம் வாரத்தில் பாதிப்பு உச்சத்தை தொடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளையில், இரண்டாம் அலையால் அரசு பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.
குறிப்பாக மருத்துவ நெருக்கடியையும் நிதி நெருக்கடியையும் சந்தித்துள்ளது. முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதனிடையில், ஆக்சிஜன் பிரச்னை பெரும் பிரச்னையாக மாறியது. இதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்த தமிழக அரசு, தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே போல, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லையென்பதாலும் தடுப்பூசிகளை அரசே கொள்முதல் செய்ய முடிவெடுத்தது. அதற்காக டெண்டரும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags :