டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

by Editor / 03-02-2025 08:26:59am
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸும் களமாடி வருகின்றன. மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்தவகையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே.புரத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

 

Tags : டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

Share via