சிகார் பகுதியில் பயங்கர சாலை விபத்து 8 பேர் பலி

by Staff / 02-01-2023 01:10:50pm
 சிகார் பகுதியில் பயங்கர சாலை விபத்து 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டேலா-பல்சானா சாலையில், பைக் மீது பிக்-அப் வேன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியது. இந்த விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் சமோத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிக்-அப் வேனில் இருந்தவர்கள் கண்டேலாவில் உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via